இந்தியில் 'கஜினி' படம் 2-ம் பாகம்


இந்தியில் கஜினி படம் 2-ம் பாகம்
x

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து 2005-ல் வெளியான கஜினி படம் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நாயகிகளாக அசின், நயன்தாரா ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படம் இந்தியில் அமீர்கான் நடிக்க ரீமேக் ஆகி அங்கும் வசூலில் சக்கைப்போடு போட்டது.

அமீர்கான் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த லால்சிங் சத்தா இந்தி படம் படுதோல்வி அடைந்தது. இதனால் நடிப்பில் இருந்து கொஞ்ச காலம் ஓய்வு எடுத்து குடும்பத்தினரோடு நேரத்தை செலவிட இருப்பதாக தெரிவித்து இருந்தார். அடுத்து ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்று அமீர்கான் முனைப்பு காட்டி வருகிறார்.

இதற்காக நிறைய பேரிடம் கதை கேட்டு வந்தார். எதுவும் திருப்தி இல்லை. இதையடுத்து கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார். இதற்கான திரைக்கதை தயாராகிறது. தெலுங்கு தயாரிப்பாளர் அல்லுஅரவிந்திடம் கஜினி இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து அமீர்கான் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.


Next Story