திகில் கதையில் ஹன்சிகா


திகில் கதையில் ஹன்சிகா
x

ஹன்சிகா புதிய சைக்காலஜிக்கல் திகில் கதையில் நடிக் கிறார். இந்த படத்துக்கு `மேன்' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஆரி அர்ஜுனன் வில்லனாக நடிக்கிறார். கலாப காதலன் படம் மூலம் பிரபலமான இகோர் டைரக்டு செய்கிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``ஆண்மை என்பது அகங்காரமாக மாறி பெண்களை அடக்கி ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது. இதை எதிர்க்கும் ஒரு பெண்ணின் போராட்டமே படம். ஹன்சிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இதில் வித்தியாசமான ஹன்சிகாவை பார்க்கலாம்.

ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை திரையில் ஒட்ட வைக்கும், இந்த படத்துக்கு சரண்யா பாக்யராஜ் திரைக்கதை எழுதி உள்ளார். மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. படப் பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது'' என்றார். ஒளிப்பதிவு: மணிகண்டன், இசை: ஜிப்ரான்.

1 More update

Next Story