நடிக்கவிடாமல் சதி செய்தார்... நடிகர் மம்முட்டி மீது ஷகிலா புகார்


நடிக்கவிடாமல் சதி செய்தார்... நடிகர் மம்முட்டி மீது ஷகிலா புகார்
x

மலையாள திரையுலகில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஷகிலா. இவரது படங்கள் கேரளாவில் வெளியாகும்போது தியேட்டர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. பெரிய பட்ஜெட்டில் எடுத்த முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் படங்களின் வசூலை ஷகிலா படங்கள் பின்னுக்கு தள்ளின.

இதனால் மலையாள படங்களில் நடிக்க ஷகிலாவுக்கு தடை விதிக்க நடிகர்கள் சதி செய்தனர். இதையடுத்து ஷகிலா சென்னை திரும்பி விட்டார்.

இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து ஷகிலா அளித்துள்ள பேட்டியில், "நான் மலையாள படங்களில் நடித்து 22 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் என்னை பழைய ஷகிலாவாகவே பார்க்கிறார்கள்.

மம்முட்டி எனது படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த முயன்றதாக கேள்விப்பட்டேன். அவரது கோபத்தில் நியாயம் உள்ளது.

அவர்கள் ரூ.5 கோடி செலவழித்து படம் எடுக்கிறார்கள். நாங்கள் ரூ.10 லட்சத்தில் படம் எடுக்கிறோம். ரூ.5 கோடி படத்தை ரூ.10 லட்சத்தில் எடுத்த படம் காலி செய்தால் கோபம் வரத்தானே செய்யும். எனக்கு நடிக்க அவர்கள் தடை விதிக்க நினைத்ததும் நானே மலையாளத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டு வாங்கிய அட்வான்சை திருப்பி கொடுத்து விட்டேன். நான் நடித்த 23 படங்களுக்கு சென்சார் சான்றிதழ் கொடுக்காமல் வைத்து தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்தினர்" என்றார்.

1 More update

Next Story