"ஓட்டலில் இரவு தங்க சொன்னார்" டைரக்டர் மீது நடிகை புகார்


ஓட்டலில் இரவு தங்க சொன்னார் டைரக்டர் மீது நடிகை புகார்
x

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக நடிகைகள் பலர் 'மீ டூ'வில் ஏற்கனவே புகார் தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினர். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியும், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இவர் ஷாருக்கானுடன் 'கபி ஹான் கபி நா' படத்தில் நடித்து பிரபலமானார்.

சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி அளித்துள்ள பேட்டியில், "ஒரு படத்தில் நடிக்க டைரக்டரை ஓட்டலில் சந்தித்து பேசினேன். அப்போது நீ யாருடன் நெருக்கமாக இருக்கிறாய்? உனது அம்மாவிடமா? அப்பாவிடமா என்று கேட்டார். அப்பாவிடம் என்றேன்.

உடனே அவர் ரொம்ப நல்லது. இன்று இரவு ஓட்டலில் தங்கிவிட்டு நாளை காலை வீட்டுக்கு வருகிறேன் என்று உனது தந்தையிடம் சொல்லி விடு. நானே காலையில் வீட்டில் கொண்டு விடுகிறேன்'' என்றார். அவரது நோக்கம் புரிந்தது. எனக்கு அழுகை வந்தது. உடனே எனது பொருட்களை எல்லாம் எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே ஓடி வந்து விட்டேன்'' என்றார். இது பரபரப்பாகி உள்ளது.

1 More update

Next Story