பாக்ஸ் ஆபீசில் சறுக்கும் இந்தி 'விக்ரம் வேதா'... படத்தின் பட்ஜெட்டை விட குறைவாக வசூல்


பாக்ஸ் ஆபீசில் சறுக்கும் இந்தி விக்ரம் வேதா... படத்தின் பட்ஜெட்டை விட குறைவாக வசூல்
x

இந்தியில் வெளியான ‘விக்ரம் வேதா’ 2 வாரங்களுக்குப் பிறகும் இதுவரை 126 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.

மும்பை,

தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியில் அதே பெயரில் இத்திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

இந்தி ரீமேக்கில், மாதவன் கதாபாத்திரத்தில் சயீஃப் அலிகானும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. அதே தேதியில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படமும் இந்தி மொழியில் அங்கு வெளியாகி இருந்தது.

ஆரம்பம் முதலே விக்ரம் வேதா திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் அதன் வசூல் எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை. சுமார் 175 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், 2 வாரங்களுக்குப் பிறகும் இதுவரை 126 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வெளியிட்டுள்ளது.


Next Story