அமலாபால் பகிர்ந்த கவர்ச்சி வீடியோ


அமலாபால் பகிர்ந்த கவர்ச்சி வீடியோ
x

தமிழில் சிந்து சமவெளி படத்தில் அறிமுகமாகி மைனா படத்தில் பிரபலமான அமலாபால் அடுத்தடுத்து குவிந்த பட வாய்ப்புகளால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என்று பெரிய ஹீரோக்களுடன் நடித்தார்.

டைரக்டரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். பின்னர் மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கினார். போலே என்ற இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

அமலாபாலுக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதனால் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது அமலாபால் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோவில் பிகினி உடையில் கடற்கரையில் நின்று கவர்ச்சியாக நடனம் ஆடுகிறார். இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பலர் அமலாபாலை கண்டித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக இப்படி கவர்ச்சியில் இறங்கி இருப்பதாகவும் விமர்சித்து உள்ளனர்.


Next Story