காந்தாராவின் மொத்த பட்ஜெட் ரூ.16 கோடி; ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? - வியப்பில் திரையுலகம்


காந்தாராவின் மொத்த பட்ஜெட் ரூ.16 கோடி; ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? - வியப்பில் திரையுலகம்
x

கன்னட மொழியில் காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கே.ஜி.எப். படத்தின் பிரமாண்டத்திற்குப் பிறகு, இந்திய ரசிகர்களின் பார்வை மீண்டும் கன்னட சினிமா பக்கம் திரும்பியுள்ளது. அதற்கு காரணம் காந்தாரா திரைப்படம்.

ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்து கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கன்னடா மொழியில் வெளியான திரைப்படம் காந்தாரா. முதலில் கன்னட மொழியில் வெளியான காந்தாரா கடந்த 15-ம் தேதி தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.

மலைவாழ் மக்களின் வாழ்க்கை, கடவுள் நம்பிக்கை, இறை வழிபாட்டு முறை, சிறு தெய்வ வழிபாடு, நம்பிக்கை துரோகம், வலிமை உள்பட பல்வேறு பரிமாணங்களை கொண்டிருந்த இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் அனைத்து மொழி ரசிகர்களாலும் மிகவும் ரசிக்கப்பட்ட படமாக மாறியுள்ளது.

காந்தார திரைப்படத்தில் மொத்த பட்ஜெட் 16 கோடி ரூபாய் ஆகும். இந்நிலையில், உலகம் முழுவதும் காந்தாரா திரைப்படம் இதுவரை வசூலித்த தொகை எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.16 கோடி பட்ஜெட்டில் செப்டம்பர் 30ம் தேதி வெளியான காந்தாரா திரைப்படம் 300 கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. கடந்த 2-ம் தேதி வரை 33 நாட்களில் உலகம் முழுவதும் மொத்தம் 305 கோடி ரூபாய் வசூல் செய்து காந்தாரா திரைப்படம் சாதனை படைத்து வருகிறது. தொடர்ந்து இந்த படத்திற்கு திரையரங்களில் வரவேற்பு இருப்பதால் காந்தாரா திரைப்படம் 350 கோடி ரூபாய் வசூலை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஜிஎப் 2- திரைப்படத்திற்கு பின்னர் அதிக வசூலை பெற்ற கன்னடா மொழி திரைப்படம் என்ற பெருமையை காந்தாரா பெற்றுள்ளது.

1 More update

Next Story