'நடிகர் தனுஷின் தந்தை நான்தான்' என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் உயிரிழப்பு


நடிகர் தனுஷின் தந்தை நான்தான் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 13 April 2024 3:50 AM GMT (Updated: 13 April 2024 5:14 AM GMT)

நடிகர் தனுஷை தங்கள் மகன் எனக்கூறி கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

மதுரை,

நடிகர் தனுஷை தங்கள் மகன் எனக்கூறி மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கதிரேசன் நேற்று உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 70). இவருடைய மனைவி மீனாட்சி. இந்த தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டு மேலூர் கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் தள்ளுபடியாகின. ஆனாலும், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சட்ட போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களது வழக்கு மாவட்ட கோர்ட்டில் இப்போதும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story