இயக்குனரை கவர்ந்த இளையராஜா பாடல்
விடுதலை முதல் பாகத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் இணைந்து நடிக்கும் 'விடுதலை' படம் 2 பாகங்களாக தயாராகிறது. இதில் பவானிஶ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். விடுதலை முதல் பாகத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான 'உன்னோட நடந்தா...' என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட காலமாக மெலோடி பாடலை எதிர்பார்த்த இசை ரசிகர் களுக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடலாக மாறி இருக்கிறது. இந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பினால் மகிழ்ந்து இயக்குனர் வெற்றி மாறனும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் இளைய ராஜாவை நேரில் சந்தித்து மலர்கொத்து கொடுத்து பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story