இன்னொரு திகில் படத்தில், விஷ்ணு விஷால்


இன்னொரு திகில் படத்தில், விஷ்ணு விஷால்
x

விஷ்ணு விஷால் மீண்டும் ஒரு திகில் படத்தில் நடிக்கிறார்.

விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த 'ராட்சசன்' படம் வெற்றி பெற்றதை அடுத்து, அவர் மீண்டும் ஒரு திகில் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு, 'ஆர்யன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பரபரப்பான திரைக்கதையையும், எதிர்பாராத திருப்பங்களையும் கொண்ட கதை, இது.

இதில், டைரக்டர் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் கதாநாயகிகளாக நடிக்க, மற்ற பாத்திரங்களில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கே.பிரவீன் டைரக்டு செய்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.


Next Story