'இந்தியன்-2' படத்தின் அறிமுக வீடியோ - இன்று வெளியீடு


இந்தியன்-2 படத்தின் அறிமுக வீடியோ - இன்று வெளியீடு
x
தினத்தந்தி 3 Nov 2023 6:16 AM GMT (Updated: 3 Nov 2023 7:23 AM GMT)

அறிமுக வீடியோவை இன்று மாலை 5.30 மணிக்கு ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் 'இந்தியன்-2'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி, தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இதனிடையே சமீபத்தில் படத்தின் டப்பிங் பணிகளை கமல்ஹாசன் தொடங்கினார்.

இந்த நிலையில் 'இந்தியன்-2' படத்தின் அறிமுக வீடியோ இன்று வெளியாகிறது. இதனை இன்று மாலை 5.30 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிக்கான கிளிம்ஸ் வீடியோக்களை இயக்குனர் ராஜமவுலி மற்றும் நடிகர் அமீர் கான் ஆகியோர் வெளியிடுகின்றனர்.
Next Story