காயம் குணமடைந்தது... படப்பிடிப்புக்கு திரும்பும் விக்ரம்


காயம் குணமடைந்தது... படப்பிடிப்புக்கு திரும்பும் விக்ரம்
x

பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் தங்கலான் படத்தில் விக்ரம் நடித்து வருகிறர். சமீபத்தில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு ஒத்திகையின்போது ஏற்பட்ட விபத்தில் விக்ரமுக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் விக்ரம் தற்போது பூரண குணம் அடைந்து படப்பிடிப்புக்கு செல்ல தயாராகி இருக்கிறார். இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட தங்கலான் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது. வருகிற 15-ந்தேதி முதல் தங்கலான் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளது என்றும் பா.ரஞ்சித் தெரிவித்து உள்ளார். தங்கலான் படத்தில் இதில் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார். அவரது தோற்றம் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். கோலார் தங்க வயல் உருவாவதற்கு முன்பு அந்த நிலத்தில் இருந்த தங்கத்தை தோண்டி எடுத்த மக்களைப் பற்றிய கதையாக இந்த படம் தயாராவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story