ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியின் காதல் வலையில் சுஷ்மிதா சென்


ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியின் காதல் வலையில் சுஷ்மிதா சென்
x

58 வயதான ஐ.பி.எல். கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித்மோடிக்கும், சுஷ்மிதா சென்னுக்கும் காதல் மலர்ந்துள்ளது.

பிரபல இந்தி நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென் தமிழில் நாகார்ஜுனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில், 'ஷக்கலக்க பேபி' பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். சுஷ்மிதா சென்னுக்கு 46 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

''என் வாழ்வில் சில ஆண்களால் ஏற்பட்ட ஏமாற்றங்கள் காரணமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. அதில் இருந்து கடவுள்தான் என்னைக் காப்பாற்றினார்" என்று கூறினார். இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், 58 வயதான ஐ.பி.எல். கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித்மோடிக்கும், சுஷ்மிதா சென்னுக்கும் காதல் மலர்ந்துள்ளது.லலித்மோடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் `சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ''எனது துணையான சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன். சுஷ்மிதா சென்னை காதலிக்கிறேன். அதே நேரத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. விரைவில் திருமணம் நடைபெறும்" என்று பகிர்ந்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் முறைகேட்டில் சிக்கிய லலித் மோடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

லலித் மோடியின் முதல் மனைவி உடல்நலக்குறைவால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

1 More update

Next Story