ஜல்லிக்கட்டு படம்... 1960-களில் நடக்கும் கதையில் சூர்யா


ஜல்லிக்கட்டு படம்... 1960-களில் நடக்கும் கதையில் சூர்யா
x

சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ 1960-களில் நடக்கும் கதை கதை போன்று இருக்கும் என தகவல் வெளியானது.

சூர்யா கைவசம் பாலா இயக்கும் வணங்கான் மற்றும் சிறுத்தை சிவா இயக்கும் படங்கள் உள்ளன. இந்த படங்களை முடித்துவிட்டு வெற்றி மாறன் டைரக்டு செய்யும் வாடி வாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். ஜல்லிக்கட்டு கதையம்சத்தில் தயாராக உள்ளது. இதில் சூர்யா மாடுபிடி வீரராக நடிக்கிறார். இந்த படத்துக்காக காளையை அடக்கும் பயிற்சி எடுத்து வருகிறார். வாடி வாசல் படத்துக்கான அறிவிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே வெளியான நிலையிலும், இன்னும் படப்பிடிப்பை தொடங்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் வெற்றி மாறன் தயாரித்துள்ள பேட்டைக்காளி வெப் தொடரும், வாடி வாசல் கதையும் ஒன்றாக இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவர் கூறும்போது, ''பேட்டைக்காளி' இணையத்தொடருக்கும், 'வாடிவாசல்' கதைக்கும் சம்பந்தம் இல்லை. 'பேட்டைக்காளி' கதை சமகாலத்தில் நடக்கும் கதை. ஆனால், 'வாடிவாசல்' கதைக்களம் 1960-களில் நடக்கும் கதை போன்று இருக்கும். அப்போதைய அரசியல் காலக்கட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும்" என்றார். டிசம்பர் அல்லது அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் 'வாடிவாசல்' படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.

1 More update

Next Story