சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஜெயம் ரவி


சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஜெயம் ரவி
x

நடிகர் ஜெயம் ரவி கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்குப் பின் ஜெயம் ரவியின் இறைவன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

பின்னர், அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படம் சைரன். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது ஜெயம் ரவி, 'ஜீனி' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்தான வீடியோ இணையத்தில் வைரலாகியது. அதில் அவர், அய்யப்பனுக்கு பிடித்த கருப்பு நிற உடையணிந்து காணப்பட்டார். மேலும், சவரம் செய்து இளமையாக தெரிந்தார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சைரன் திரைப்படம் வரும் 19-ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.


Next Story