சாய் பல்லவியின் மகிழ்ச்சி


சாய் பல்லவியின் மகிழ்ச்சி
x

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் சாய் பல்லவி. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களிலும் நடிக்கிறார். சினிமா அனுபவங்கள் குறித்து சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில்,

''நான் டாக்டருக்கு படித்து இருந்தாலும் நடிக்கும் ஆசை இருந்தது. பெற்றோர் தடுக்கவில்லை. அழகு என்பது தோற்றத்தில் இல்லை. குணத்தில்தான் இருக்கிறது என்பதை வெளிப்படுத்த பிரேமம் படத்தில் எளிமையாக நடித்து இருந்தேன்.

அந்த படம் பெரிய அளவுக்கு வெற்றி பெறும் என்று அப்போது நினைக்கவில்லை. பிரேமம் படத்தில் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தின் இமேஜை மாற்றி வேறு கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு நினைவூட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். நான் நடித்த படங்களும், கதாபாத்திரங்களும் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதுமாதிரியான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன்.

நல்ல கதை அமைந்தால் எந்த மொழி படங்களில் வேண்டுமானாலும் நடிப்பேன். என்னை பார்ப்பவர்கள் எங்கள் வீட்டு பெண் மாதிரி இருக்கிறாய் என்கின்றனர். அதை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்


Next Story