'உத்தமவில்லன்' நஷ்டத்தை ஈடு கட்ட உதவும் கமல்


உத்தமவில்லன் நஷ்டத்தை ஈடு கட்ட உதவும் கமல்
x

டைரக்டர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015-ல் வெளியாகி நஷ்டம் அடைந்தது. இந்த நிலையில் நஷ்டத்தை ஈடுகட்ட மீண்டும் லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் கமல்ஹாசன் நடித்து உதவ இருக்கிறார்.

இதுகுறித்து லிங்குசாமி கூறும்போது, ''உத்தமவில்லன் படத்தை திறமையாக, கடின உழைப்போடுதான் எடுத்தார்கள். ஆனால், அப்படத்தினால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்தது உண்மைதான். முதலில் நாங்கள் 'பாபநாசம்' படத்தை தயாரிக்கத்தான் முடிவு எடுத்தோம். ஆனால், கமல்ஹாசன் ஆசைப்பட்டதால் 'உத்தமவில்லன்' படத்தை எடுத்தோம். அது அவருக்கும் தெரியும்.

உத்தமவில்லன் படத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய கமல்ஹாசன் ஒரு படத்தில் நடித்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார்'' என்றார்.

மேலும் லிங்குசாமி பேசும்போது, ''பிளவு திரையில் எடுக்கப்பட்ட 'பிகினிங்' படம் திறமையான கலைஞர்களால் உருவாகி உள்ளது. இந்த படத்தை ஜெகன் விஜயா இயக்க வினோத் கிஷன், கவுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'பிகினிங்' படம் புதிய அனுபவத்தை கொடுக்கும். இனிமேல் திரைப்பட பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவோம். புதிய திரைக்கதை தயார் செய்துள்ளேன். இரண்டு மூன்று மாதங்களில் அந்த படத்தை டைரக்டு செய்வேன்'' என்றார்.


Next Story