நடிகர் சங்கத்தினருக்கு தீபாவளி பரிசு வழங்கிய கார்த்தி


நடிகர் சங்கத்தினருக்கு தீபாவளி பரிசு வழங்கிய கார்த்தி
x

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டன.

சென்னை:

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் அடங்கிய தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்கனவே விருமன் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கு சூர்யா ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கி இருந்தார். இந்நிலையில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கினர். இதில் இருந்து தீபாவளி பரிசு பொருட்கள் வாங்கி சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாக நடிகர் சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள நடிகர் சங்க உறுப்பினர்கள் 1002 பேருக்கு அந்தந்த மாவட்டங்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை அனுப்பி வைத்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள 1206 உறுப்பினர்களுக்கு நடிகர் சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, தளபதி தினேஷ், எம்.ஏ.பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினார்கள்.


Next Story