நயன்தாராவை மீண்டும் வம்புக்கு இழுத்த கஸ்தூரி


நயன்தாராவை மீண்டும் வம்புக்கு இழுத்த கஸ்தூரி
x
தினத்தந்தி 13 Aug 2023 6:00 AM GMT (Updated: 13 Aug 2023 6:03 AM GMT)

என்னை பொறுத்தவரையில் நடிகைகளில் 'லேடி சூப்பர் ஸ்டார்' யார்? என்று கேட்டால் பழம்பெரும் நடிகைகள் கே.பி.சுந்தராம்பாள், விஜயசாந்தி போன்றவர்கள் தான்' என்று கஸ்தூரி கூறினார்.

திரை உலகில் சர்ச்சையான கருத்துகளை கூறி பரபரப்பு வளையத்துக்குள் இருப்பவர் கஸ்தூரி. அரசியலிலும் பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.

நடிகர்-நடிகைகளின் கருத்துகளை விமர்சித்து பரபரப்பு ஏற்படுத்தி வந்த கஸ்தூரி, நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற நேரத்தில், 'இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது' என்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். சில பரபரப்பான கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இதனால் கடுமையான விமர்சனத்துக்கும் ஆளானார்.

இந்தநிலையில் கஸ்தூரி மீண்டும் நயன்தாராவை சீண்டியுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கஸ்தூரி, நயன்தாரா தொடர்பான ஒரு கேள்விக்கு பதில் அளித்தார்.

அதில், 'தென்னிந்தியாவில் நயன்தாராவை 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அங்கீகரிக்க முடியாது. என்னை பொறுத்தவரையில் நடிகைகளில் 'லேடி சூப்பர் ஸ்டார்' யார்? என்று கேட்டால் பழம்பெரும் நடிகைகள் கே.பி.சுந்தராம்பாள், விஜயசாந்தி போன்றவர்கள் தான்' என்று கஸ்தூரி கூறினார்.

கஸ்தூரியின் இந்த கருத்து பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. நயன்தாராவின் ரசிகர்கள் அவரை சரமாரியாக விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.


Next Story