'முகை' -கதாநாயகனாக கிஷோர்


முகை -கதாநாயகனாக கிஷோர்
x
தினத்தந்தி 16 Jun 2023 2:07 AM GMT (Updated: 16 Jun 2023 8:12 AM GMT)
நடிகர்: கிஷோர்,ஜெயப்பிரகாஷ், நடிகை: ஆர்ஷா சாந்தினி பைஜூ  டைரக்ஷன்: அஜித்குமார். ஜே இசை: சக்தி 

'முகை' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் நாயகனாக கிஷோர், நாயகியாக ஆர்ஷா சாந்தினி பைஜூ ஆகியோர் நடித்துள்ளனர். திரில்லர் வகை படமாக தயாராகி உள்ளது. லைட் ஹவுஸ் மீடியா, ஶ்ரீ தர்மா புரொடக் ஷன்ஸ் மற்றும் ஜாஸ்பர் ஸ்டுடியோஸ், விஸ்தாரா பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்தப் படத்தை அறிமுக டைரக்டர் அஜித்குமார். ஜே டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ``இது என் முதல் படம், ஒரே இடத்தில் நடக்கும் கதை. கிஷோர் குமார் இப்படத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும்'' என்றார்.

நடிகர் ஜெயப்பிரகாஷ் கூறும்போது, ``ஒரு சின்ன அறைக்குள் படம் எடுப்பது சவாலான விஷயம். கிஷோருக்கு சவால் பிடிக்கும். திரில்லர் படமாக தெரிகிறது'' என்றார். படத்தின் ஒளிப்பதிவாளர் அர்ஜுன் கூறும்போது, ``இயக்குநர் அஜித் மிகத்தெளிவான சிந்தனையுடன் இருந்தார். படத்தை பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருந்தார். அதனால் என் வேலை சுலபமாக இருந்தது. படம் நன்றாக வந்துள்ளது'' என்றார். இசை: சக்தி.


Next Story