ரஜினியா... கமல்ஹாசனா.. யாரு ஜெய்கிறாங்கனு பாப்போம் - கவனம் ஈர்க்கும் '80ஸ் பில்டப்' பட டீசர்...!


ரஜினியா... கமல்ஹாசனா.. யாரு ஜெய்கிறாங்கனு பாப்போம் - கவனம் ஈர்க்கும் 80ஸ் பில்டப் பட டீசர்...!
x

சந்தானம் நடித்துள்ள '80ஸ் பில்டப்' படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

'குலேபகாவலி', 'ஜாக்பாட்' , 'கோஸ்டி' போன்ற படங்களை இயக்கிய கல்யாண் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் '80-ஸ் பில்டப்'. இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ராதிகா பிரீத்தி நடிக்கிறார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 80-களில் நடக்கும் இந்தப் படத்தின் கதை, பேன்டசி டிராமாவாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

ரஜினி ரசிகரான தாத்தா, கமல் ரசிகரான பேரன் இடையே நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு காமெடியாக உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வருகிற 24ஆம் தேதி வெளியாக உள்ளது.


Next Story