இந்தி நடிகருடன் காதல்... ரகுல் பிரீத் சிங்குக்கு விரைவில் திருமணம்


இந்தி நடிகருடன் காதல்... ரகுல் பிரீத் சிங்குக்கு விரைவில் திருமணம்
x

ரகுல் பிரீத் சிங் இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்து அவரை காதலிப்பதை உறுதி செய்தார். சில மாதங்களில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் தடையற தாக்க படத்தில் அறிமுகமான ரகுல் பிரீத் சிங்குக்கு கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று வெற்றிகரமாக ஓடி பெயர் வாங்கி கொடுத்து பிரபலப்படுத்தியது. தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசனில் இந்தியன்-2 படத்திலும் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்து அவரை காதலிப்பதை உறுதி செய்தார். தற்போது ரகுல் பிரீத் சிங்குக்கு 32 வயது ஆகிறது. எனவே அடுத்த சில மாதங்களில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ரகுல்பிரீத் சிங்கின் சகோதரர் கூறும்போது, "எல்லா காதல் உறவுக்கும் திருமணம்தான் முடிவு. இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. ரகுல் பிரீத் சிங்-ஜாக்கி பக்னானி திருமணம் விரைவில் நடக்கும். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ரகுல்பிரீத் சிங் வெளியிடுவார்" என்றார். இதையடுத்து ரகுல் பிரீத் சிங்கின் திருமண அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பாரா என்பது தெரியவில்லை.


Next Story