'குறி வச்சா இரை விழணும்' அதிரடி வசனத்துடன் ரஜினிகாந்த் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு...!


குறி வச்சா இரை விழணும்  அதிரடி வசனத்துடன் ரஜினிகாந்த் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு...!
x
தினத்தந்தி 12 Dec 2023 6:07 PM IST (Updated: 12 Dec 2023 6:21 PM IST)
t-max-icont-min-icon

'தலைவர் 170' ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள புதிய படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். அவர் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் லைகா தயாரிப்பில், ஞானவேல் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

தலைவர் 170 என்ற பெயரில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று (இன்று) வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு 'வேட்டையன்' என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பெயர் குறித்த டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 'குறி வச்சா இரை விழணும்' என்ற வசனத்துடன் படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் புதிய படத்திற்கு வேட்டையன் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் பெயர் குறித்த டீசர் வீடியோவை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


1 More update

Next Story