சீனாவின் ஷான்சி மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு: 4 பேர் உயிரிழப்பு


சீனாவின் ஷான்சி மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு: 4 பேர் உயிரிழப்பு
x

Image Courtesy : AFP

தினத்தந்தி 14 Aug 2023 3:17 AM IST (Updated: 14 Aug 2023 11:50 AM IST)
t-max-icont-min-icon

மாயமான 16 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

பீஜிங்,

சீனாவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்குள்ள ஷான்சி மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன.

இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிர்ழந்தனர். மேலும் 16 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

1 More update

Next Story