வேலை வாங்கி தருகிறேன் என கூறி பணமோசடி; பிரபல நடிகை மீது எப்.ஐ.ஆர். பதிவு


வேலை வாங்கி தருகிறேன் என கூறி பணமோசடி; பிரபல நடிகை மீது எப்.ஐ.ஆர். பதிவு
x

ஒடிசாவில் வேலை வாங்கி தருகிறேன் என கூறி பணமோசடி செய்து விட்டார் என பிரபல நடிகை மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.



புவனேஸ்வர்,


ஒடிசாவில் புவனேஸ்வர் நகரில் உள்ள சாகீத்நகர் காவல் நிலையத்தில் பிரபல நடிகை வர்ஷா பிரியதர்ஷினி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில், வர்ஷா மற்றும் அவரது உதவியாளர் ஆயுஷி இருவரும் சேர்ந்து நகைக்கடை ஒன்றில் தனக்கு வேலை வாங்கி தருகிறேன் என கூறி ரூ.30 ஆயிரம் பணம் பெற்று கொண்டனர்.

ஆனால், வேலை வாங்கி தராமல் மோசடி செய்து விட்டனர் என கல்யாணி நாயக் என்பவர் புகாரில் தெரிவித்து உள்ளார். அவர்கள் இருவரும் பணம் வாங்கிய பின்பு எங்கே சென்றார்கள் என்றே தெரியவில்லை. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.

நடிகை வர்ஷா, எம்.பி.யான அனுபவ் மொகந்தி என்பவரின் மனைவியாவார். எனினும், இது பொய்யான மற்றும் அடிப்படையற்ற குற்றச்சாட்டு என கூறிய வர்ஷா, சதிகாரர்களுக்கு உறுதியாக சட்டப்படி தண்டனை வாங்கி தருவேன் என கூறியுள்ளார்.


Next Story