நயன்தாரா நடித்துள்ள 'ஓ2' படத்தின் டிரைலர் வெளியீடு..!


நயன்தாரா நடித்துள்ள ஓ2 படத்தின் டிரைலர் வெளியீடு..!
x

நடிகை நயன்தாரா நடித்துள்ள 'ஓ2' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகை நயன்தாரா தற்போது 'ஓ2' என்ற கதாநாயகியை மையமாகக் கொண்ட திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களில் ஒருவரான ஜி.கே. விக்னேஷ் என்பவர் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்த திரைப்படத்தை டீரிம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விபத்தில் சிக்கும் பேருந்து ஒன்றில் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்ளும் தாய், நுரையீரல் பிரச்சினைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பேருந்தில் சக பயணிகள் குறிவைக்க தன் மகனை அவர்களிடமிருந்து எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படமாக 'ஓ2' உருவாகியுள்ளது.

தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பார்வதி என்ற அம்மா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அவரது மகனாக பிரபல யூடியூப் குழந்தை நட்சத்திரம் ரித்விக் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஓ2 படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. 'ஓ2' திரைப்படம் வருகிற ஜூன் 17-ந்தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.



Next Story