தமிழுக்கு வரும் புதுநாயகி


தமிழுக்கு வரும் புதுநாயகி
x

டெல்லியைச் சேர்ந்த தேவியானி ஷர்மா தெலுங்குத் திரைத்துறையில் நவீன் சந்திர பானுமதி ராமகிருஷ்ணாவுடன் அறிமுகமாகி படிப்படியாக பல பாத்திரங்களில் தலை காட்டினார். ஓ.டி.டி தளங்களில் வெளியான ஷைத்தான் மற்றும் சேவ் தி டைகர்ஸ் தொடர்களில் முதன்மை கதாபாத்திரத் தில் நடித்து புகழ் பெற்றார்.இளம் ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறிவரும் தேவியானி ஷர்மா அடுத்து தமிழ் படங்களில் நடிக்க வருகிறார்.

தேவியானி ஷர்மா ஒரு மேடை நாடக கலைஞர் மற்றும் பாரம்பரிய நடனத்தை கற்றுத் தேர்ந்தவர். `திரைத்துறையில் கமர்ஷியல் நாயகியாக அல்லாமல், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் மாறுபட்ட முயற்சிகளில் ஈடுபடுவதே என் கனவு' என்கிறார். தமிழ் சினிமா பற்றி கூறுகையில், ``நான் தமிழ் சினிமாவை மிகவும் ரசித்து பார்ப்பேன் கலையும் கமர்ஷியலும் சரியான விகிதத்தில் இங்கு கலந்துள்ளது. எனக்கு தமிழ் சினிமாவில் எல்லோரையும் ரொம்பப் பிடிக்கும். இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தில் பணியாற்ற வேண்டும்'' என்றார்.


Next Story