தியாகம் செய்ய தேவை இல்லை... பெண்களுக்கு அறிவுறுத்தும் ராதிகா ஆப்தே


தியாகம் செய்ய தேவை இல்லை... பெண்களுக்கு அறிவுறுத்தும் ராதிகா ஆப்தே
x

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், "சமூகத்தில் ஆண்களுக்கு சமமாக வேலை செய்து சம்பாதித்தாலும் வீட்டு வேலைகளை முழுமையாக நாம்தான் செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் பெண்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.

எங்கள் வீட்டிலேயே சிறு வயது முதல் இதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அம்மா, அப்பாவிற்கு சொந்த ஆஸ்பத்திரி உள்ளது. என் அம்மாவும் அப்பாவிற்கு சமமாக ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிறார். வீட்டுக்கு வந்தவுடன் அம்மா குடும்பத் தலைவியாக மாறிவிடுகிறார். சமையலில் ஆரம்பித்து வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் அவர் மட்டுமே பார்த்துக் கொள்கிறார். ஆணும் பெண்ணும் சமம் என்பது போல் பார்க்க பயப்படுகிறார்.

சிறு வயது முதலே வீட்டு வேலைகளையெல்லாம் பெண் பிள்ளைகள் தான் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதுதான் இதற்கு காரணம். வீட்டு வேலையை அனைவரும் பகிர்ந்து கொண்டால் ஒருவர் மீதே பாரம் இருக்காது. நல்ல குடும்பத் தலைவி என்று பெயர் வாங்குவதற்காக பெண்கள் தியாகங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.


Next Story