கமலுக்கு 7 படங்களில் நடிக்க வாய்ப்புகள்?


கமலுக்கு 7 படங்களில் நடிக்க வாய்ப்புகள்?
x

கமல் நடிக்க உள்ள புதிய படங்கள் பட்டியலில் 7 படங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் 4 வருட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள விக்ரம் படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வசூலில் ரூ.500 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கின்றனர். விக்ரம் படத்தின் வெற்றியால் கமல்ஹாசனுக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. பல புதிய மற்றும் பழைய இயக்குனர்கள் கதை சொல்ல அணுகி வருகிறார்கள். இதனால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க தயாராகி உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி கமல் நடிக்க உள்ள புதிய படங்கள் பட்டியலில் 7 படங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள டைரக்டர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிப்பதை கமல்ஹாசன் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். வெற்றி மாறன் இயக்கும் படத்தில் நடிப்பதும் பரிசீலனையில் உள்ளது.

ஷங்கர் தெலுங்கு படத்தை இயக்குவதால் இந்தியன்-2 படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. தெலுங்கு படத்தை அவர் முடித்து விட்டு வந்ததும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். விக்ரம் படத்தின் 3-ம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். மற்ற படங்கள் விவரம் வெளியாகவில்லை. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.


Next Story