எதிர்ப்பு வலுக்கிறது... ஷாருக்கான் படத்துக்கு 2 மாநிலங்களில் தடை?


எதிர்ப்பு வலுக்கிறது... ஷாருக்கான் படத்துக்கு 2 மாநிலங்களில் தடை?
x

ஷாருக்கான் நடித்த ‘பதான்’ படத்துக்கு வலுக்கும் எதிர்ப்புகளால் 2 மாநிலங்களில் தடை விதிக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள 'பதான்' இந்தி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடலில் காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து தீபிகா படுகோனே கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இது இந்துக்கள் உணர்வை புண்படுத்துவதாக உள்ளது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஷாருக்கான் கொடும்பாவியை எரித்து போராட்டங்கள் நடந்தன.

பாடலில் இடம்பெற்றுள்ள காவி உடை மற்றும் வரிகளை நீக்காவிட்டால் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்குவது குறித்து யோசிக்க வேண்டி வரும் என்று மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா எச்சரித்துள்ளார். இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் பதான் படத்துக்கு தடை விதிக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 'பதான்' படத்தை உங்கள் மகளுடன் பார்ப்பீர்களா என்று மத்திய பிரதேச சபாநாயகர் கிரிஷ் கவுதம் கேள்வி விடுத்துள்ளார்.

இந்த நிலையில் பீகாரிலும் 'பதான்' படத்துக்கு தடை விதிக்கப்படும் என்று பா.ஜ.க. தலைவர் ஹரி பூஷன் தாக்கூர் மிரட்டல் விடுத்துள்ளார். அவர் கூறும்போது, "காவியை படத்தில் அவமதித்து உள்ளனர். தீபிகா படுகோனே குட்டை உடை அணிந்து அநாகரிகமாக ஆடி இருக்கிறார். பீகாரில் தியேட்டர்களில் 'பதான்' படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்'' என்றார்.

1 More update

Next Story