'பொன்னியின் செல்வன்' பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு - படக்குழு கொடுத்த அப்டேட்


பொன்னியின் செல்வன் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு - படக்குழு கொடுத்த அப்டேட்
x

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பொன்னியின் செல்வன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது.

அதில் சோழர்களின் உலகில் இசைப் பயணத்தைத் தொடங்குவோம் என்று பதிவிட்டு, படத்திலிருந்து 'பொன்னி நதி' என்ற முதல் பாடல் வருகிற ஜூலை 31-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Next Story