2-வது மனைவி மூலம் பெண் குழந்தைக்கு தந்தையான பிரபுதேவா


2-வது மனைவி மூலம் பெண் குழந்தைக்கு தந்தையான பிரபுதேவா
x

நடிகர் பிரபுதேவா கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத்தை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2011-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 2019-ல் முதுகுவலி காரணமாக மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரபுதேவா சிகிச்சை பெற்றார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்த பிசியோதெரபி டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் காதல் மலர்ந்தது.

2020-ம் ஆண்டு ஹிமானி சிங்கை, பிரபுதேவா திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் ரகசியமாக நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

சமீபத்தில் மனைவி ஹிமானியுடன் பிரபுதேவா திருப்பதியில் தரிசனம் மேற்கொண்டார். அப்போதுதான் ஹிமானி சிங் புகைப்படம் வெளியானது

தற்போது பிரபுதேவா-ஹிமானி சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பிரபுதேவா-ரம்லத்துக்கு ஏற்கனவே 2 மகன்கள் உள்ளனர். இப்போது முதல் பெண் குழந்தைக்கு பிரபுதேவா தந்தையாகி இருக்கிறார்.


Next Story