பிரியங்கா சோப்ரா பயந்த அனுபவங்கள்


பிரியங்கா சோப்ரா பயந்த அனுபவங்கள்
x

தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா, இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்.

தற்போது சினிமா அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் பிரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டியில், "நான் 20 வயதில் நடிகையாக அடியெடுத்து வைத்தேன். அப்போது சினிமா துறையில் யாருடைய அறிமுகமும் இல்லை. அதனால் ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் பீதி அடைந்தேன்.

ஒரு படத்துக்கு வாய்ப்பை இழந்தாலும், படம் தோல்வி அடைந்தாலும் வேதனை அடைந்தேன். படப்பிடிப்பு அரங்கில் அடியெடுத்து வைக்கும்போது அவமானமாகவும் கஷ்டமாகவும், பயமாகவும் இருக்கும்.

இப்போது உயர்ந்த நிலைக்கு வந்துள்ள நான் அந்த காலத்து பிரியங்கா சோப்ராவுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால் "கவலைப்படாதே, பீதி அடையாதே, எல்லா விஷயங்களையும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளாதே. வாழ்க்கையை ஜாலியாக அனுபவி, இது கஷ்டமான பணி இல்லை, உனக்கு எல்லாம் நல்லதுதான் நடக்கும். சிரித்துக்கொண்டே வாழ்க்கை பயணத்தை நன்றாக அனுபவி என்று சொல்வேன்" என்றார்.

1 More update

Next Story