கதாநாயகனான டாக்டர்


கதாநாயகனான டாக்டர்
x

டாக்டருக்கு படித்து மருத்துவத் தொழில் செய்து வந்த ஆதித் சுந்தரேஸ்வரர், கதாநாயகனாகி உள்ளார். கல்லூரியில் படித்தபோது, `தூரிகையே ஓவியமானதே' என்ற குறும்படத்தில் நடித்தார்.

பின்னர் நடிப்பு பயிற்சியை முடித்து `ஆ ஆவன்னா' என்ற குறும்படத்தில் நடித்து சைமா விருது பெற்றார். மிஸ்கின் உதவி இயக்குனர் மீனா குமாரி டைரக்டு செய்த `பாஸ் பேபி' வெப் தொடரில் கதை நாயகனாக வந்தார். `லெஜன்ட்' திரைப்படத்தில் சிறிய வேடம் ஏற்றார். `யாதுமாகி நின்றாய்' குறும்படத்தில் நாயகனாக நடித்து விருது பெற்றார். படிப்படியாக முன்னேறி `நேற்று நீ இன்று நான்' திரைப்படத்தில் கதாநாயகன் ஆனார். `ஆயிரம்கால் மண்டபம்' படத்திலும் நாயகனாக நடித்துள்ளார்.

தற்போது சேரன் இயக்கி உள்ள வெப் தொடரில் ஆரி, கலையரசனுடன் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன.


Next Story