வயநாடு நிலச்சரிவு: ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம் நிதியுதவி


வயநாடு நிலச்சரிவு: ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம் நிதியுதவி
x

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சினிமா பிரபலங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 296 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல கிராமங்களில் மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் நடிகர் விக்ரம் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 20 லட்சம் நிதி உதவி வழங்கினார். நடிகர் விக்ரமை தொடர்ந்து நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து கேரள முதல்- மந்திரியின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் தொகையை வழங்கியுள்ளனர். மேலும் பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, கேரள முதல்- மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story