நடிகை கேத்தரினுக்கு கணவராக தகுதிகள்
நடிகை கேத்தரினுக்கு கணவராக என்னென்ன தகுதிகள் வேண்டும் என அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழில் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கேத்தரின் தெரசா. தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். கேத்தரின் தெரசா அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு புத்தகங்கள் படிப்பது மிகவும் பிடிக்கும். எங்கு போனாலும் திருமணம் பற்றி எல்லோரும் கேட்கிறார்கள். எனக்கு கணவராக வர இருப்பவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அவர் என்னை போல புத்தகங்கள் படிக்க வேண்டும். எனது உயரத்தைவிட கூடுதலாக இருக்க வேண்டும். உடலை கட்டுக்கோப்பாக வைத்து ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னை போலவே உணவை விரும்பி சாப்பிட வேண்டும். இந்த லட்சணங்கள் இருப்பவர்தான் எனக்கு சரியான ஜோடி. அப்படிப்பட்டவர் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. நடிகர்களில் லியோனார்டோ, ராபர்ட் டோனி, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் தீவிர ரசிகை நான். சிறு வயது முதலே எனக்கு பில் கிளிண்டன் என்றால் மிகவும் பிடிக்கும். ஏன் என்று தெரியாது. ஆனால் எனக்கு மட்டும் பில் கிளிண்டனை இப்போதும் கூட மிகவும் பிடிக்கும்" என்றார்.