புதிய படத்தில் ரகுமான், பாவனா


புதிய படத்தில் ரகுமான், பாவனா
x

பாவனா நீண்ட இடைவெளிக்கு பிறகு படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். தற்போது முதன் முறையாக ரகுமான், பாவனா இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி உள்ளது. இதில் ரகுமான் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நாயகனாக வருகிறார். பாவனா தடயவியல் மருத்துவ அதிகாரியாக நடிக்கிறார்.

புதுமுக டைரக்டர் ரியாஸ் மாரத் டைரக்டு செய்கிறார். அதிரடி திரில்லர் படமாக உருவாகிறது. தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்தை அதித் பிரசன்ன குமார் தயாரிக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார்.

இது தவிர ரகுமான் மலையாளத்தில் அமல் கே. ஜோசப் இயக்கும் `எதிரே', சார்லஸ் இயக்கும் `சமாரா', தமிழில் ரவிசந்திரா இயக்கும் `அஞ்சாமை', கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார், அதர்வாவுடன் இணைந்து `நிறங்கள் மூன்று' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் `கண்பத்' படம் மூலம் அறிமுகமாகிறார்.`100 பேபீஸ்' என்ற வெப் தொடரிலும் நடிக்கிறார்.

1 More update

Next Story