வைரலாகும் ரஜினி புகைப்படம்


வைரலாகும் ரஜினி புகைப்படம்
x

ரஜினி தனது வீட்டில் செல்போன் பார்த்தபடி சாதாரணமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை அவரது மகளும் டைரக்டருமான ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

ரஜினிகாந்த் நடிகர் என்ற அடையாளம் இல்லாமல் பொது இடங்களில் எப்போதுமே இயல்பாக பங்கேற்பதை பார்க்க முடியும். படப்பிடிப்பு அரங்கில் மட்டுமே மேக்கப்போடு இருப்பார். படத்தில் நடித்து முடித்ததும் சகஜ நிலைக்கு மாறி விடுவார்.

இந்த நிலையில் ரஜினி தனது வீட்டில் செல்போன் பார்த்தபடி சாதாரணமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை அவரது மகளும் டைரக்டருமான ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் ''இந்த புகைப்படத்துக்கு பில்டர் எடிட் அவசியம் இல்லை. தவறான கோணத்தில் இருக்க முடியாத முகம். விலைமதிப்பில்லாத நேர்மறையான ஒரு புகைப்படம். இதுபோன்று எல்லோரது வாழ்விலும் அமைய வாழ்த்துகள்" என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் டைரக்டு செய்கிறார். இது ரஜினிக்கு 169-வது படம். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது.


Next Story