மாற்றம் அறக்கட்டளை தொடங்கிய நடிகர் ராகவா லாரன்சுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
ராகவா லாரன்ஸ் இன்னும் பல ஆயிரம் ஏழை மக்களுக்கு உதவி செய்யணும் என்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
'மாற்றம்' அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் ராகவா லாரன்சுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், "வணக்கம் லாரன்ஸ் மாஸ்டர்! நீங்கள் பல வருடமாக நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறீர்கள். இப்பொழுது இன்னும் நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக 'மாற்றம்' என்கிற அறக்கட்டளையை ஆரம்பித்து இருக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் இன்னும் பல ஆயிரம் ஏழை மக்களுக்கு உதவி செய்யணும். அதற்கு அந்த ஆண்டவனுடைய அருள், மக்களுடைய துணை எப்போதும் இருக்கணும். வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இதனை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், "தலைவர், என் குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து 'மாற்றம்' அறக்கட்டளை தொடங்கியுள்ளதற்கு வாழ்த்துகளைப் பெற்றேன். உங்கள் நிலையான ஆதரவால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. குருவே சரணம்" என்று தெரிவித்துள்ளார்.