ஒரே காரில் சென்ற ரஜினிகாந்த், இளையராஜா - சந்திப்பின் பின்னணி என்ன?


ஒரே காரில் சென்ற ரஜினிகாந்த், இளையராஜா - சந்திப்பின் பின்னணி என்ன?
x

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்து பேசினார்.

சென்னை,

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லம் அமைந்துள்ளது. அங்கு நடிகர் ரஜினிகாந்தை இசையமைப்பாளர் இளையராஜா இன்று நேரில் சென்று சந்தித்தார். அவருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு அங்கிருந்து புறப்பட இளையராஜா தயாராகியுள்ளார்.

அப்போது, "எங்கு செல்கிறீர்கள்?" என ரஜினிகாந்த் கேட்கவே, இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற உள்ளதாக இளையராஜா கூறியுள்ளார். அப்போது தானும் உடன் வருவதாக தெரிவித்த ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை ஒத்திகை நடக்கும் ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்தபடி இளையராஜா தலைமையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையை ரஜினிகாந்த் கண்டு ரசித்தார். இவர்களது சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.


Next Story