மகளுக்காக ரூ.250 கோடியில் பங்களா...ஆச்சரியப்படுத்தும் பாலிவுட் தம்பதி

image courtecy:instagram@ranbir_kapoor_official
ரன்பீரும் ஆலியாவும் சரி சமமாக தங்கள் பணத்தை இதற்காக செலவிட்டுள்ளனர்.
மும்பை,
இந்தி திரைத்துறையின் முன்னணி நடிகை ஆலியாபட். இவர் கடந்த 2022ம் ஆண்டு இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராகா என பெயரிடப்பட்டது.
இந்நிலையில், ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதி தங்களது மகள் ராகாவுக்காக ரூ. 250 கோடி மதிப்பில் பங்களா ஒன்றை மும்பையில் கட்டி வருகிறார்கள். ரன்பீரும் ஆலியாவும் சரி சமமாக தங்கள் பணத்தை இதற்காக செலவிட்டுள்ளனர். இந்த வீட்டை தங்கள் மகள் ராகா பெயரில் பதிவு செய்ய இருக்கிறார்கள். இதன் மூலம் பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக ராகா இருப்பார்.
தற்போது வரை ஷாருக்கானின் மன்னட் பங்களாவும், அமிதாப்பச்சனின் ஜல்சா பங்களாவும்தான் மும்பையில் உள்ள விலையுயர்ந்த பங்களாவாக உள்ளன. இந்நிலையில், ராகாவுக்காக ரூ. 250 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பங்களா மும்பையின் விலையுயர்ந்த பங்களாவாக உருவாக உள்ளது. இந்த செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.






