விக்ரம் ஜோடியாக ராஷ்மிகா
விக்ரம் நடிக்கும் 61-வது படத்தில் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரம் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்' படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது விக்ரமுக்கு 61-வது படம். கோலார் தங்க வயல் பின்னணியில் நடக்கும் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து தயாராவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பது யார் என்று எதிர்பார்ப்பு உருவான நிலையில் ராஷ்மிகா மந்தனாவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமான ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது இந்தியில் மிஷன் மஞ்சு, குட்பை, தெலுங்கில் சீதா ராமம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் வாரிசு இந்தியில் ரன்பீர் கபூருடன் அனிமல், தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா 2-ம் பாகம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.