சரித்திர படங்களை விரும்பும் சாய்பல்லவி


சரித்திர படங்களை விரும்பும் சாய்பல்லவி
x

சரித்திர, புராண படங்களில் நடிக்க விரும்புவதாக நடிகை சாய்பல்லவி தெரிவித்து உள்ளார்.

சாய்பல்லவி நடித்துள்ள 'கார்கி' படம் திரைக்கு வந்து அவரது கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்துள்ளது. இந்த நிலையில் சரித்திர, புராண படங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு பழைய காலகட்டத்து சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. 'பத்மாவத்' மற்றும் 'பாஜிராவ் மஸ்தானி' ஆகிய படங்களில் தீபிகா படுகோன் நடித்தது போன்ற வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். 1970-களில் நடப்பதுபோன்ற கதையம்சத்தில் தெலுங்கில் தயாரான 'ஷியாம் சிங்க ராய்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சில திரைப்படங்களைப் பார்க்கும்போது அந்த குறிப்பிட்ட பாத்திரம் எனக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று நினைத்து பார்ப்பது உண்டு. என்னிடம் வரும் கதைகளில் எது நன்றாக இருப்பதாக தோன்றுகிறதோ அந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள்தான் வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது இல்லை" என்றார்.


Next Story