அமெரிக்காவில் ரசிகர்களை சந்தித்த சமந்தா...!


அமெரிக்காவில் ரசிகர்களை சந்தித்த சமந்தா...!
x
தினத்தந்தி 27 Aug 2023 10:52 AM IST (Updated: 27 Aug 2023 10:53 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ரசிகர்களை சமந்தா சந்தித்தார்

பான் இந்தியா ஸ்டாராக கலக்கி கொண்டிருந்த சமந்தா, 'மயோசிடிஸ்' என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு காரணமாக படாதபாடு பட்டு வருகிறார். இதற்காக அவர் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய 'அட்வான்ஸ்' தொகையையும் அவர் திருப்பி தந்துள்ளார்.

சமந்தா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக 'குஷி' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த பட விழா முடிந்த கையோடு, சமந்தா அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அவரது தாயாரும் உடன் சென்றுள்ளார்.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ரசிகர்களை சமந்தா சந்தித்தார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுடன், 'நியூயார்க் கனவு தேசம் என்பார்கள். 14 வருடங்களுக்கு முன்பு என் முதல் படம் இங்கு படமாக்கப்பட்டது. அப்போது என்ன ஏது? என்று தெரியாத பயந்த சிறு பெண்ணாக இருந்தேன். ஆனால், இப்போது அப்படி இல்லை. என் கனவுகளை இன்னும் பெரிதாக்கும் தைரியம் கொண்டவளாக 14 வருடங்கள் கழித்து இங்கே வந்திருக்கிறேன்' என்றும் சமந்தா பதிவிட்டுள்ளார்.

சமந்தாவின் இந்த உற்சாகமான பதிவால் அவரது ரசிகர்களும் உற்சாகம் கொண்டுள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டு முன்புபோல திரையில் ஜொலிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர்.

1 More update

Next Story