திகில் கதையில் சந்தானம்


திகில் கதையில் சந்தானம்
x

சந்தானம் திகில் கதையம்சம் உள்ள படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை பிரேம் ஆனந்த் டைரக்டு செய்துள்ளார். படம் குறித்து அவர் கூறும்போது, ``இந்தப் படம் பேய் படங்களில் புது மாதிரியாகவும் திகில், சைக்கோ, நகைச்சுவை, கிரைம் சரியான அளவில் கலந்த முழு நீள பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். ஒரு விறுவிறுப்பான விளையாட்டு, ரசிகர்களை எவ்வாறு இருக்கையின் நுனிக்கு கொண்டு வருமோ, அதுபோன்ற ஒரு அனுபவத்தை இந்தப் படம் வழங்கும்'' என்றார்.

சுரபி கதாநாயகியாக வருகிறார். பிரதாப் ராவத், மசூம் ஷங்கர், மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, கூல் சுரேஷ், தீனா, மாறன், தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வில்லன் நடிகர்களான பெப்சி விஜயனும், தீனாவும், ரெடின் கிங்ஸ்லியுடன் இணைந்து காமெடி செய்துள்ளனர். சென்னை, புதுச்சேரி மற்றும் கேரளாவில் படப் பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஆர்.கே. எண்டர்டெயின்மெண்ட் ரமேஷ்குமார் தயாரிக்கிறார். இசை: ஆப்ரோ, ஒளிப் பதிவு: தீபக்.

1 More update

Next Story