நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி

image courtesy:instagram@iamsrk
நடிகர் ஷாருக்கான் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான். இவர் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கிறார். நேற்று அகமதாபாத்தில் நடந்த குவாலிபயர் 1 சுற்றில் கொல்கத்தா அணியும் ஐதராபாத் அணியும் மோதின. இதில் கொல்கத்தா வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியை கொல்கத்தா அணி உரிமையாளரான ஷாருக் கான் நேரடியாகக் கண்டுகளித்து, தன் அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்நிலையில், நடிகர் ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெப்ப அலைகள் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ள ஷாருக் கான், தற்போது அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.






