நயன்தாராவை பாராட்டிய நடிகர் ஷாருக்கான்


நயன்தாராவை பாராட்டிய நடிகர் ஷாருக்கான்
x

ஷாருக்கானிடம் நயன்தாரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாருக்கான், நயன்தாரா மிகவும் இனிமையானவர் என்றும் அவருக்கு பல மொழிகள் தெரிவதாகவும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடித்துள்ள பதான் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்த படம் வெளியாவதற்கு முன்பே பாடல் காட்சியொன்றில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து கவர்ச்சியாக நடனம் ஆடியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. போலீசிலும் புகார் அளித்தனர்.

பதான் படத்தை புறக்கணிக்கும்படி ஹேஷ்டேக்கும் டிரண்டிங் ஆனது. ஆனால் எதிர்ப்பையும் மீறி பதான் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வசூல் குவித்து வருகிறது. வசூல் ரூ.750 கோடியை தாண்டி உள்ளது. இதனால் ஷாருக்கான் மகிழ்ச்சியில் இருக்கிறார். அடுத்து ஷாருக்கான் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ஜவான் இந்தி படம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் ரசிகர்களுடன் ஷாருக்கான் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் நயன்தாரா பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து ஷாருக்கான் கூறும்போது, 'நயன்தாரா மிகவும் இனிமையானவர். எல்லா மொழிகளையுமே அவர் சிறப்பாக பேசுகிறார். ஜவான் படத்தில் நயன்தாராவுடன் நடித்தது மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது. ஜவான் படத்தில் நயன்தாராவின் நடிப்பு எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்' என்றார்.


Next Story