சைரன் படத்தின் ஓ.டி.டி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு


சைரன் படத்தின் ஓ.டி.டி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 15 April 2024 11:00 AM GMT (Updated: 15 April 2024 12:39 PM GMT)

சைரன் படம் ஏப்ரல் 19-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி.,யில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்குப் பின் ஜெயம் ரவியின் இறைவன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி திரையரங்குகளில் சைரன் படம் வெளியானது. தற்போது ஜெயம் ரவி, 'ஜீனி' படத்தில் நடித்து வருகிறார்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சைரன் படத்தின் பட்ஜெட் 30 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், படம் 15 கோடி வசூலுக்கு மேல் ஈட்டவில்லை என அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின.

சைரன் படத்தின் சேட்டலைட் உரிமத்தை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியதாக அண்மையில் தகவல் வெளியாகியது. அதே போல் சைரைன் படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமம் மட்டுமே 40 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக கூறப்பட்டது.

இப்படம் தற்போது ஓ.டி.டி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அதன்படி படம் வரும் ஏப்ரல் 19-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி.,யில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story