அவதூறு பதிவுகள்... வலைத்தளத்தை விட்டு விலகும் நடிகை டாப்சி


அவதூறு பதிவுகள்... வலைத்தளத்தை விட்டு விலகும் நடிகை டாப்சி
x

டாப்சிக்கு எதிராக வலைத்தளத்தில் பலர் அவதூறு பதிவுகள் வெளியிடுகிறார்கள். இதனால் சமூக வலைத்தளத்தை விட்டு விலகி இருக்க போவதாக தெரிவித்துள்ளார்.

தமிழில் பிரபல நடிகையாக இருந்த டாப்சி தற்போது இந்தியில் அதிக படங்களில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களும் அமைகின்றன. சில விஷயங்களை டாப்சி வெளிப்படையாக பேசி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். திமிர் பிடித்தவர் என்று விமர்சனங்கள் வருகின்றன. இதனால் டாப்சிக்கு எதிராக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. அவரை கண்டித்து பலர் அவதூறு பதிவுகள் வெளியிடுகிறார்கள். இதுகுறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில், ''சில நடிகர், நடிகைகள் மாதிரி கேமராவுக்கு முன்னால் நடிப்பதுபோல பின்னாலும் எனக்கு நடிக்க தெரியாது. நான் எப்போதும் நேர்மையாக இருப்பேன். என்னை நிறைய பேர் விமர்சிக்கிறார்கள். இது வேதனை அளிக்கிறது. இதனால் சமூக வலைத்தளத்தை விட்டு விலகி இருக்க வேண்டும் என்றும், என்னை பற்றி வரும் தகவல்களை வலைத்தளத்தில் போய் தேடக்கூடாது என்றும் முடிவு செய்து இருக்கிறேன். நான் பாராட்டுக்கு அலைபவள் இல்லை. எனக்கு பிடித்த மாதிரி இருப்பேன். சமூகத்தில் நல்ல பெயர் வாங்க சில நட்சத்திரங்கள் வெளியேயும் நடிக்கிறார்கள். எல்லோருக்கும் என்னை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு நடிகை என்ற முறையில் என்னை பாராட்டினால் போதும்" என்றார்.

1 More update

Next Story