மீண்டும் உண்மை கதையில் சூர்யா


மீண்டும் உண்மை கதையில் சூர்யா
x

சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும், இதுவும் உண்மை சம்பவம் பற்றிய கதை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் 2020-ல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளையும் வென்றது. ஓ.டி.டி. தளத்தில் அதிகமானோர் பார்த்த பிராந்திய மொழி படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் வந்தது. தற்போது சூரரைப்போற்று படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தி பதிப்பில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார்.

இந்த நிலையில் மீண்டும் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும், இதுவும் உண்மை சம்பவம் பற்றிய கதை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் நடிக்கிறார்.

1 More update

Next Story